பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2015

வரவு செலவுத் திட்டம் குறையுள்ள திட்டம் : சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

புதிய அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு விமர்சனமும் உள்ளடக்கப்படவில்லை என்பதால் இதுவொரு குறையுள்ள திட்டம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்பிக்கப்பட்டது. இது தொடர்பில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.