பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2015

மன்னாரில் தாயக விடியலுக்காக உயிர் நீத்த வீரப் புதல்வர்களுக்கு அஞ்சலி.
வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015
மன்னாரில் இன்று பிரத்தியோக இடமொன்றில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மாவீரர்கள் நினைவு தினம் இன்று மாலை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ். சிவகரன் 
தலைமையில நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இ.செபமாலை அடிகளார், அதன் செயலாளர் பி.ஏ.அந்தோனி மார்க், வட மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அதன் உறுப்பினர் பிறிமூஸ் சிராய்வா,
மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் ஞானபிரகாசம், அதன் உறுப்பினர்களான ரெட்ணசிங்கம் குமரேஸ், மேறினஸ் மற்றும் அருட் தந்தையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.