பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2015

தைவான் நாட்டில் விருது வென்ற காக்கா முட்டை



தைவான் நாட்டின் தலைநகரில் NETPAC எனப்படும் ஆசிய கோல்டன் திரைப்பட விழா தாய்பே-யில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகில் வெளிவந்து தேசிய விருதுகளை வென்ற "காக்கா முட்டை" திரையிடப்பட்டது. இந்த படம் பல நாடுகளுக்கு சென்று பல விருதுகளை வாங்கி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டனுக்கு சிறந்த திரைப்படத்தை திரையிட்டதற்கான விருது வழங்கப்பட்டது. 



அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிகண்டன்;-

இந்த படத்திற்கு உலக விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏன் என்றால் இந்த படத்தில் நடித்த அனைத்து பசங்களும் சேரி பகுதியில் வசிக்கிறவர்கள். அவர்களுக்கு இரண்டு மாதங்கள் பயிற்சி அளித்த பிறகுதான் இந்த படத்தில் நடித்தார்கள். இவர்களை போல் யாரும் நடிக்கவில்லை.


இந்த படத்திற்கு இந்தியாவில் அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. சமூதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிற படமாக அமைந்திருக்கிறது. அதேபோல் உலக நாடுகளிலும் இந்த படம் சென்றடைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அக்கூட்டத்தில் இயக்குனர் மணிகண்டன் தெரிவித்தார்.