பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2015

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது



திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலின் அருகேயுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. 

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடி கோவில் கொடிமரம் முன்பு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலில் உள்ள பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

கிரிவலப் பாதையில் 14 கிலோ மீட்டர் முழுவதும் குவிந்திருந்த பக்தர்கள் மலையை நோக்கி பார்த்து மகா தீபத்தை வணங்கினர். மகாதீபம் ஏற்றிய பிறகு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை ஏற்றினர். வீடுகள் மட்டுமின்றி தெருக்களிலும் பொதுமக்கள் அகல் விளக்கினையும் ஏற்ற ஆனந்தமடைந்தனர். அப்போது நகர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. மகா தீப நிகழ்ச்சியை காண பல்வேறு ஊர்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டனர்.