பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2015

போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பிரித்தானியா நிதியுதவி

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுன்ஸ்களை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு மோல்டாவில் நேற்று  ஆரம்பமாகியது.

இதில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே அவர் இந்த உறுதி மொழியை வழங்கியிருப்பதாக தி இன்டிபென்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கும் இதனூடாக உதவிவழங்க முடியும் என்று பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார்