பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2015

தனித்துப் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி அனைத்து தொகுதியிலும் தோல்வி


பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாரே தொடருவார் என்று லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சி மெகா கூட்டணியில் ஆரம்பத்தில் இடம் பெற்றது. அதன்பின்பு கூட்டணியில் இருந்து வெளியேறி பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அந்த கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் மற்றும் உத்தர பிரதேச முதல் மந்திரியான அகிலேஷ் யாதவ் அகிலேஷ் தனது டுவிட்டர் செய்தியில், வரலாற்று வெற்றி பெற்றுள்ள நிதிஷ்ஜி மற்றும் லாலுஜி ஆகியோருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.