பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2015

மழை வெள்ளத்தில் சிக்கிய எம்ஜிஆர் இல்லம்:மாற்றுத்திறனாளி குழந்தைகள் 100 பேர் தவிப்பு!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வசித்த ராமாபுரம் இல்லம் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அங்கு தங்கி
பயிலும் வாய் பேசமுடியாத காது கேட்காத குழந்தைகள் 100 உதவிக்காகத் தவித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர் இல்லம் சென்னை ராமாபுரம் பகுதியிலுள்ளது.அதில் காது கேட்காதோர், வாய் பேசமுடியாத மாணவர்கள்  தங்கி கல்வி பெற்று வருகின்றனர். இந்நிலையில், கனமழை காரணமாக  எம்ஜிஆர் கார்டன் பகுதியில் 23 அடிக்கு வெள்ளம் நிற்கிறது. இதனால், சுமார் 100 மாணாக்கர்களும், ஊழியர்களும், 2வது மாடியில் தஞ்சமடைந்துள்ளனர்.