பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2015

தவறவிடப்பட்ட 15 பவுண் தங்க நகைகளுடனான கைப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது

வீதியில் கண்டெடுத்த 15 பவுண் தங்க நகைகளுடனான கைப்பை ஒன்றை  பொலிஸார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தார் சாவகச்சேரி நீதிமன்றப் பணியாளர்.

கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மானிப்பாய் வீதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நீதிமன்றப் பணியாளர்  வீதியில் கைப்பை ஒன்று காணப்பட்ட நிலையில் அதனை எடுத்து வீட்டுக்குக் கொண்டு சென்று பார்த்துள்ளார். அதனுள் பலவகையான தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அது குறித்து மறுநாள் பகுதிக்கிராம அலுவலருக்குத் தெரியப்படுத்தினார்.

கைப்பையினுள் உடுவிலைச் சேர்ந்த பெண்ணின் தேசிய அடையாள அட்டை, சாரத்திய அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்பட்டதை அடுத்து அவருடன் கிராம அலுவலர்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அறிவித்துள்ளார். அங்கு வந்த பெண் நகைகளை அடையாளம் காட்டிப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை - குறித்த பெண் ஓட்டோவில் சென்ற போது கைப்பை தவறி வீழ்ந்தமை தெரியாமல், ஓட்டோ சாரதி திருடி விட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு  செய்திருந்தார் என்று கூறப்பட்டது.