பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2015

மும்பையில் 2 ஆயிரம் குடிசைகள் எரிந்து சாம்பல் - 2 பேர் பலி



   மும்பையில் ஏழை தொழிலாளிகள் வசிக்கும் பகுதியில் சின்னஞ்சிறு குடிசைகள் அமைத்து தங்கி இருக்கிறார்கள். பகலில் கூலி வேலைக்கு சென்று வாங்கும் கூலியில் அவர்கள் வாழ்க்கை ஓடியது.

    மிகவும் நெருக்கமான குடிசைகள் கொண்ட இந்தப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் 2 ஆயிரம் குடிசைகள் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் 2 பேர் பலியானா்கள் 13 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   இந்த விபத்து இரவில் ஏற்பட்டிருந்தால் உயிர் பலி எண்ணிக்கை கூடியிருக்க கூடும்.  பகல் நேரம் என்பதால் அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர்.  ஏழை தொழிலாளிகளின் பொருட்கள் அனைத்தும் எரிந்துவிட்டது.