பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2015

தமிழ் மக்கள் அவையின் 2வது அமர்வு 27ம் திகதிசீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள மாட்டார்


வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் அவை தனது 2ம் அமர்வினை எதிர்வரும் 27ம் திகதி நடத்தவுள்ளதுடன், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நிபுணர் குழு ஒன்றையும் உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது விடயமாக மக்கள் அவை ஒழுங்கமைப்பு குழு விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் (கீழ்தளம்) நடைபெறும்.
இவ் அமர்வில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தீர்வு திட்டத்தை தயாரிக்கும் நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டு நிபுணர்கள் அறிவிக்கப்படுவதுடன்,
ஐ.நா தீர்மானம் நடைமுறைபடுத்தப்படுவதை அவதானிக்கும் குழு மற்றும் தமிழ் மக்களின் கலை, கலாச்சார விடயங்களை கண்காணிப்பதற்கான குழுக்கள் உருவாக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த 2ம் அமர்வில் இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள மாட்டார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன