பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2015

புலிகளின் சர்வதேச திறைசேரியில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி?


தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனேடிய பாதுகாப்பு முகவர் நிறுவனமொன்று அண்மையில் வெளியிட்ட இரகசிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையில் புலிகளின் இந்த நிதி பற்றி முதல் தடவையாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனேடிய கோயில் ஒன்றில் அர்ச்சகராக செயற்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு இந்த இரகசிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யப் போகின்றார்கள் என்பது கேள்விக்குறியே என இரகசிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அதன் வலையமைப்புக்களின் நிதி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை என சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.