பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2015

ஆட்டநேரநிறைவில் 207 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகள்

west
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின்
இரண்டாம்நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில், பிராவோ 159 பந்துகளை எதிர்கொண்டு 94 ஓட்டங்களையும் ரோச் 89 பந்துகளை எதிர்கொண்டு 31 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர். முன்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 583 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.