பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2015

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணி

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் - அம்பலத்தடி பகுதியில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் மூன்று நாட்டப்பட்டு அதன் நடுவில் உழவர்சிலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மற்றும் கிராம தலைவர்கள் உள்ளிட்ட பொது மக்களும் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.