பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2015

கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 400 பேருந்துகள் இயக்க முடிவு


,சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் வெள்ள நீர் ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 இதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு உதவும் வகையில், போக்குவரத்துதுறை சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சுமார் 400 பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இந்த பேருந்துகள் மாற்றுப்பாதையில் பூந்தமல்லி, வலஜா, ஸ்ரீபெரும்பதூர் வழியாக இயக்கப்படும்.