பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2015

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு: ஜனாதிபதி

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனை மேலும் 6 மாதத்திற்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ராஜகிரியவில் உள்ள ஜனாதிபதி கல்லூரியில் இன்று முற்பகல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தினால், கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் சேவைகள் வலுவிழந்துள்ள கூறியுள்ள ஜனாதிபதி, தொகுதி வாரியாக தேர்தலை நடத்தும் உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை சரி செய்ய இன்னும் 6 மாதங்கள் செல்லக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.