பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2015

விமானப் படைக்குச் சொந்தமான துருப்புக்காவி விமானமொன்று மிகத்தழ்வாகப் பறந்து பெரும்பரப் பரப்பை ஏற்படுத்தியுள்ளது

விமானப் படையின் விமானமொன்று இன்று மதியம் 11.45 மணிக்கு மிகத்தாழ்வகப் பறந்து முல்லைத்தீவு மக்களின் கசப்பான நிகழ்வுகளை மீட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, விசுவமடு ஊடக இரணைமடு நோக்கி இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான துருப்புக்காவி விமானமொன்று மிகத்தழ்வாகப் பறந்து பெரும்பரப் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக குறித்த விமானம் தாழ்வாகப் பறந்திருக்கலாம்.  எனினும், ஓய்ந்திருந்த மழை தற்போது பெய்யத் தொடங்கியுள்ளது.
விமானம் பறந்தமையானது, போரினால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மக்களின் கடந்தகால நினைவுகளை மீள நினைவுபடுத்தியதாக அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.