பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2015

கைதுசெய்யப்பட்டுள்ள பராகுவே ஹோண்டுராஸ் கால்பந்தாட்ட அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக பீபா தெரிவித்துள்ளது.


சுவிட்ஸ்லாந்தின் ஷுரிஸ் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து சர்வதேச கால்பந்தாட்ட அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக பீபா தெரிவித்துள்ளது.
ஷுரிஸ் நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்து இருவர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பீபாவின் நிறைவேற்று அதிகாரிகள் குழுவின் சந்திப்பில் ஷுரிஸ் நகரில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க நீதித் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தாம் அறியக் கிடைத்துள்ளதாக கால்பந்தாட்ட நிர்வாக அமைப்பான பீபா கூறியுள்ளது.
சுவிட்ஸர்லாந்து சட்டத்தின் பிரகாரம் அனுமதியளிக்கப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகம் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு பீபா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.