பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2015

படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை



கனமழையினால் சிக்கித்தவித்த சென்னை,  ஒரு வாரத்திற்கு பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது. சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. போக்குவரத்து ஓரளவு சீரடைந்து உள்ளதால் மக்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர். ஒரு வாரத்துக்கு பின் சூரிய வெளிச்சத்தை சென்னை வாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். கடைகள், வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள், உணவகங்கள் செயல்படுகின்றன. 

பெரும்பாலான ரயில்கள், விமானங்கள் பயணிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. வாகன பழுதுபார்க்கும் நிலையங்களில் வாகனங்களுடன் மக்கள் அணிவகுத்துள்ளனர். நகரில் பல்வேறு இடங்களில் நோய் தடுப்பு சிறப்பு முகாம்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

மின்விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  செல்போன் சிக்னல் ஓரளவு இயங்கத்தொடங்கியுள்ளது.