பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2015

சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை மீட்ட இளையராஜா!

 நுங்கம்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளிக் குழந்தைகளை மீட்கும் பணியில் இசையமைப்பாளர் இளையராஜா
ஈடுபட்டார். அந்த குழந்தைகளுக்கு தேவையான உணவு  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

சென்னையில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தி வருகின்றனர். மீட்பு பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காவல்துறையினர், ராணுவம் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


பிரபல தமிழ்ப்பட இசையமைப்பாளர் இளையராஜா நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டு அருகே லிட்டில் ஃப்ளவர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த குழந்தைகள் வெளியே வர முடியாமல் சிக்கிக் தவித்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இளையராஜா,  உடனடியாக அக்கம் பக்கத்திருனருடன் அந்த பள்ளிக்கு படகில் சென்றார்.

பின்னர் அந்த பள்ளியில் தவித்துக் கொண்டிருந்த இருந்த குழந்தைகளுக்கு தைரியம் கூறி,  அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வழங்கினார். அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான உணவு பொட்டலங்களை ஏற்பாடு செய்து மழையால் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல் தவித்த மக்களுக்கு தனது வாகனம் மூலம் எடுத்து சென்று வழங்கினார்.