பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2015

புதிய ஆசிரியர் நியமனங்கள் நாளை

புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நாளை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதன் போது தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் 200 பேர், மேற்கத்தேய சங்கீத ஆசிரியர்கள் 70 பேர், விஞ்ஞானபீட ஆசிரியர்கள் 161 பேர் ஆகியோர்களுக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.