பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2015

பதங்கங்களை அள்ளிய யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம்

k
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற தேசியமட்ட விளையாட்டு போட்டிகளில் யாழ்ப்பாணம் உயர்
தொழில்நுட்பவியல் கல்வி நிறுவன அணிக்கு 4 தங்கப்பதக்கங்களும் மூன்று வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.

கடந்த 17 ஆம் 18ஆம் திகதிகளில் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 14 உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தை பிரதிநிதித்துவம் செய்த கோபிகா குண்டு போடுதலிலும், மேரி பெனீனா நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் இரண்டிலும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினர்.
kopika
மரியரூபன் 100 மீற்றர் ஓட்டத்திலும் எட்மன்ட் ஜஸ்லின் 800 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் இரண்டிலும் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றினார். வலைப்பந்தாட்டத்திலும் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருந்தது.
marija-ruban