பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2015

நாளை வரவு செலவுத்திட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் பேச்சு

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
தொழிற்சங்கங்களுடன் நேற்றும் இன்றும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்  தொடர்பில் நாளை பிரதமர் விசேட உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
 
பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், நாளை மறுதினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் நேற்று மாலை அறிவித்திருந்தன.சுகாதாரம், புகையிரதம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலைநிறுத்தப் போராடடத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
 
இந்நிலையில், பிரதமர் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.