பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2015

தெற்காசிய கால்பந்து: அரையிறுதியில் இந்தியா-மாலத்தீவு மோதல்

தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவும், மாலத்தீவும் மோதுகின்றன.

 திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 4-1 என்ற கோல் கணக்கில் மாலத்தீவு அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 9 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. மாலத்தீவு 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது.
 வரும் 31-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் "ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியாவை சந்திக்கிறது மாலத்தீவு. மற்றொரு அரையிறுதியில் "ஏ' பிரிவில் 2-வது இடம்பிடித்த இலங்கை, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.