பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2015

உதயசூரியன், இளந்தென்றல் அணிகள் வெற்றி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் ஏவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரில் முல்லைத்தீவு மாவட்ட லீக்கில்
பதிவு செய்துள்ள கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

காலை 8 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் செம்மலை உதயசூரியன் அணியை எதிர்த்து சிலாவத்தை இளம்பறவை அணி மோதிக் கொண்டது. இதில் செம்மலை உதயசூரியன் அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அளம்பில் இளந்தென்றல் அணிக்கும் கிளிநொச்சி திருநகர் அணிக்கும் இடையில் பிற்பகல் 3 மணிக்கு இடம் பெறவிருந்த ஆட்டத்துக்கு கிளிநொச்சி திருநகர் அணி வருகை தராததால் இளந்தென்றல் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.