பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2015

கிளிநொச்சியில் மிகக்கடுமையான மழை ..பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தொடர்ந்து பெய்து வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் வடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்றுத் தொடக்கம் கிளிநொச்சியில் மிகக்கடுமையான மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், இலங்கையிலேயே அதிக மழைவீழ்ச்சி கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.
இந்தக் காலப் பகுதியில் 106.3 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு பெய்த கடும் மழையை அடுத்து கிளிநொச்சியில் பரந்தன், சிவபுரம், ஆனந்தபுரம், கனகாம்பிகைகுளம், இரத்தினபுரம், திருவையாறு உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
காட்டாற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். பல இடங்களில் இடுப்பளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மழை கொட்டி வருவதால் வெள்ள நிலைமை மோசமடையலாம் என்று கருதப்படுகிறது.
அதேவேளை, கனகாம்பிகைக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.