பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2015

மாணவி உயிரைப் பறித்த கடற்படை பேருந்து : வேலணையில் சம்பவம்

வேலணை புளியங்கூடல் சரவனை சந்தி பகுதியில்  கடற்படையினரின்  பேருந்து ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியும், ஊர்காவற்றுறை நாராந்தனைப் பகுதியைச் சேர்ந்த உசாந்தினி உதயகுமார் வயது (15) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
குறித்த மாணவி பாடசாலை செல்லும் வழியில் கடற்படைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மாணவியை மோதியது. இதில் குறித்த மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.