பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2015

வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக் கணிப்பு

வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக் கணிப்பு ஒன்று நடைபெற்று வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னிப்போரில் கலந்து கொண்ட இராணுவத் தளபதிகளுக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட வேண்டுமா?  இல்லையா? என்பது குறித்து இந்தக் கருத்துக் கணிப்பில் பொதுமக்களின் அபிப்பிராயம் கேட்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்துக் கணிப்பை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று முன்னெடுத்து வருவதாகவும், இதன் மூலம் இராணுவத்தினர் அவமானப்படுத்தப்படுவதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமானதா என்றும் குறித்த கருத்துக் கணிப்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு வலியுறுத்தும் தன்னார்வ நிறுவனம் ஒன்றே குறித்த கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.