பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2015

மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு பா.உ சாள்ஸ் நிமலநாதன் உதவி

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை அப்பியாச கொப்பிகளை நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் இன்று வழங்கி வைத்தார்.
மன்னார் பாப்பாமோட்டை றோ.க.த.க பாடசாலை மாணவ சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளின் பிள்ளைகள் 120 பேருக்கு தலா ஒருவருக்கு 10 அப்பியாச கொப்பிகள் என்ற அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினரின் சொந்த நிதியில் இருந்தே குறித்த உதவிகள் பாதிக்கப்பட்ட மாவண மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாந்தைமேற்கு மாற்றுதிறனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவானந்தராஜா, கண்டல் கிராமத்தின் விவசாய அமைப்பின் தலைவர் ச.செபஸ்ரியான், மாற்றுதிறனாழிகள், மாற்றுதிறனாளிகளின் பிள்ளைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாற்று திறனாளிகளின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்த குறித்த உதவியினை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.