பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2015

ரியோ ஒலிம்பிக்: கடினமான பிரிவில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த வருடம் பிரேசிலில் உள்ள ரியோ நகரில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும்
ஹாக்கி அணிகள் எந்தெந்த பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன என்ற பட்டியலை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய ஆண்கள் அணி ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே அணியில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனி, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து மற்றும் கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

‘ஏ’ பிரிவில் உலகச் சாம்பியன், ஹாக்கி லீக் சாம்பியனும் ஆன ஆஸ்திரேலியா, பிரிட்டன், பெல்ஜியம், நியூசிலாந்து, ஸ்பெயின் மற்றும் போட்டியை நடத்தும் பிரேசில் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ரியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான புதிய நடைமுறைப்படி இந்தியா தனக்கு பின் தரவரிசையில் இருக்கும் அயர்லாந்து மற்றும் கனடாவை வீழ்த்தினால் கடைசி 8 அணிகள் மோதும் சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆனால் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகளுடனான லீக் போட்டிகள் சவாலானதாக இருக்கும்.

பெண்கள் ஹாக்கி அணியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இது பிரிவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, சீனா, ஜெர்மனி, கொரியா மற்றும் ஸ்பெயின் அணிகள் இடம் பெற்றுள்ளன.