பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2015

நேபாளத்தில் இருந்து இலங்கை கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்பு


நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
தெ ஹிமாலயன் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த சிறுமிகள் ஐவரும் இந்தியாவுக்கு ஊடாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்படுவதற்காக இவர்கள் நேபாளத்தின் தலைநகரில் இருந்து மஹேந்திரநகருக்கு அழைத்துவரப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சிறுமிகளுடன் இருந்த இருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.