பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2015

சிம்பு வீட்டு முன்பு பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டின் முன்பு பெண்கள் விடுதலை முன்னணி, மகஇகவினர் இன்று (வெள்ளி) ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த அமிர்தா கூறும்போது, சிம்பு - அனிருத் கூட்டதாகத் தயாரித்துள்ள தனி ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பீப் சாங் என்ற ஆபாசப் பாடலை தடை செய்ய வேண்டும். இந்தப் பாடலில் பெண்களை போகப் பொருளாகச் சித்தரிக்கும், பெண் உறுப்புகளை அரைச் சொல்லாக பயன்படுத்தும் சொற்கள் இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டு, இருவரையும் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த எதிர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். 

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, பிற்போக்குப் பண்பாட்டுக்கு எதிராக போராடிவரும் பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பு மேற்குறித்த பாடலை தடை செய்ய வேண்டும் எனவும், இசை அமைத்து பாடிய இருவரையும் இதுபோன்ற சீரழிவுக் கலைகயையும், தமிழகம் புறக்கணிக்க வேண்டுமென்றும் குறிப்பாக பெண் விடுதலைக்குப் போராடி வரும் அனைவரையும் ஒன்று திரண்டு பிரச்சாரம் செய்து போராடி அழைக்கின்றோம் என்றார்.