பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2015

சச்சின் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்த்துக்கல் கால்பந்து அணி மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ,
‘சுமாஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் சக உரிமையாளராக உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்துள்ளார். இந்த நிறுவனம் கிரிக்கெட், கால்பந்து என ரசிகர்கள் விளையாடும் வகையில் ‘பார்க்’ ஒன்றை பல இடங்களில் அமைத்துள்ளது. இதில் விளையாட்டு நட்சத்திரங்களுடன் ரசிகர்கள் விளையாடி மகிழலாம்.
sachin-ronaldo
இந்த நிலையில் கால்பந்திற்கு என பிரத்யேகமாக ‘பார்க்’ ஒன்றை துபாய், சவுதி அரேபியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையிலேயே இதில் ரொனால்டோவும் முதலீடு செய்ய முன்வந்துள்ளார். இது குறித்து சச்சின் கூறுகையில், ரொனால்டோ, சுமாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்தது மகிழ்ச்சி. இதன் மூலம் ரசிகர்கள் இவருடன் சேர்ந்து கால்பந்து விளையாட வேண்டும் என்ற கனவு நனவாகும் என்று தெரிவித்துள்ளார்