பக்கங்கள்

பக்கங்கள்

15 டிச., 2015

கோத்தபாய , சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவில் நுழையத்தடை?

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவினுள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான செய்தியொன்றை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்கா செல்வற்காக வீசாவுக்கு விண்ணப்பித்திருந்த சரத் பொன்சேகாவின் வீசா விண்ணப்பம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அவரது பெயர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளமை காரணமாகவே அவரது வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரத் பொன்சேகாவின் மூத்த மகள் அப்சரா அமெரிக்காவில் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையில், அவரைப்பார்த்து வருவதற்காகவே பொன்சேகா வீசாவிற்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் சரத் பொன்சேகா மட்டுமன்றி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவருக்கும் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் அவரது கிரீன் கார்ட் வதிவிட அனுமதியும் ரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது