பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2015

பிறந்து ஒருநாளான சிசுவை பொலித்தீன் பையில் கட்டி கொலை செய்த தாய் : கிளிநொச்சியில் பரபரப்பு

பிறந்த குழந்தையை தாயொருவர் கொலை செய்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண்ணொருவருக்கு நேற்று காலை குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பொலித்தீன் பை ஒன்றில் வைத்து அலுமாரியினுள் வைத்து பூட்டி வைத்த வேளை, குழந்தை இறந்துள்ளது. 

இதனையடுத்து குறித்த தாய் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்ற வேளையே மாட்டிக் கொண்டுள்ளார்.

குறித்த தாய் திருமணம் ஆகாதவர் எனவும் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிறந்து ஒருநாளான சிசுவை பொலித்தீன் பையில் கட்டி கொலை செய்த தாய் : கிளிநொச்சியில் பரபரப்பு