பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2015

சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். 

கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, சற்று இயல்பு நிலை திரும்பிய சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. சென்னையில் அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் தாம்பரம்,  பிற புறநகர் பகுதிகளில் மழை பெய்கிறது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதை காணமுடிகிறது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.