பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2015

அரசியல்யாப்பினை உருவாக்குவது தொடர்பான பிரதமர் தலைமையிலான குழு


புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது, வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மலையக மக்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல்யாப்பினை உருவாக்குவது தொடர்பான பிரதமர் தலைமையிலான குழுவில், அமைச்சர்களாக மனோகணேசன், டி.எம்.சுவாமிநாதன், ரவுக் ஹக்கீம், றிசாட் பதியுதீன் உள்ளிட்டவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிலையில் தாம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் தொடர்பான அபிலாசைகள் குறித்து அவதானம் செலுத்தவிருப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.