பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2015

இந்தியாவில் முதல் முறையாக கஞ்சா பயிரிட அரசு அனுமதி


உத்ரகண்ட் மாநிலத்தின் அரசாங்கம் கஞ்சா பயிரிட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலேயே முதன் மாநிலமாக உத்ரகண்ட் கஞ்சா பயிரிடுவதை சட்டபூர்வமாக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி தெரை மற்றும் பாப்ஹர் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாராளமாக கஞ்சாவை பயிரிட்டுகொள்ளலாம்.
எனினும் இதற்காக மாநில அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும். மேலும் பயிரிடப்படும் கஞ்சாவை அரசாங்கத்திடம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்றும் தனி நபர்களுக்கு விற்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநிலத்தின் கிராமப்புற வளர்ச்சியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.