தாம்பரம் அருகே வீடுகளில் மழை நீர் புகுந்தது: படகுகள் மூலம் மக்கள் மீட்பு
கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்து 14 படகுகள் முலம் 500க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.