பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2015

பாரிசில் வாழும், இலங்கையர்களை சந்தித்த மைத்திரிபால சிறிசேன.



சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், சமரசம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எந்தச் சூழ்நிலையிலும் எடுக்கமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன
பாரிசில் வாழும், இலங்கையர்களை நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இந்த உறுதி மொழியை அளித்திருக்கிறார்.

அத்துடன், அனைத்துலக சமூகத்துடன் முரண்பட்டு வந்த நிலையை மாற்றி, சிறிலங்காவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில் தாம் நெருக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அனைத்துலக அரங்கில் சிறிலங்காவின் கௌரவம் மற்றும் புகழை மீளவும் நிலைநாட்ட முடிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பூகோள காலநிலை மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் இன்று பங்கேற்ற சிறிலங்கா அதிபரை, பிரான்ஸ் அதிபர் மற்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஆகியோர் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.