பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2015

சிம்புவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சிம்புவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.

இதுதொடர்பாக அவர்,  ‘’பீப் பாடல் விவகாரம், வெள்ளத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பியுள்ளது. இதைப் பெரிதாக்க அவசியம் என்ன? வெள்ளத்தின்போது டாஸ்மாக் திறந்திருந்தது. சில இடங்களில் இன்னும் நீர் வடியவில்லை. மாணவர்களின் படிப்பு, தங்கள் பொருள்களை இழந்த மக்கள் எனப் பிரச்னைகள் உள்ளன. இவற்றில் எது முக்கியமானது? ஏன் சிம்புவைக் குறிவைக்கவேண்டும்? ’’என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.