பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2015

மஹிந்த தரப்பு ஜெனீவாவில் சர்வதேச அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுவிஸ்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கம் தம்மை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளாமல் தமது உரிமைகளை நிராகரிப்பதாக முறைப்பாடு செய்ய உள்ளனர்.
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளாமை, பேசுவதற்கு மற்றும் விவாதங்களில் பங்கேற்க சந்தர்ப்பம் அளிக்காமை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெரும்பான்மை பலமுடைய தரப்பிற்கு வழங்காமை. நாடாளுமன்ற செயற்குழுக்களில் தமக்கு உரிய சந்தர்ப்பம் வழங்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் அடங்கிய விசேட மகஜர் ஒன்று எதிர்வரும் மாதம் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் சில முக்கியஸ்தர்கள் சுவிட்சர்லாந்து பயணம் செய்ய உள்ளனர்.
இந்த விடயம் குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எனினும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத காரணத்தினால் இவ்வாறு சர்வதேச ரீதியில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.