பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2015

எப்.ஏ. கிண்ணத் தொடரில் மன்னார் லீக் முடிவுகள்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னெடுத்து எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் மன்னார் லீக்கில்
அங்கம் வகிக்கும் கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்கள் சில நேற்று முன்தினம் தாழ்வுபாடு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன. அவற்றின் முடிவுகள்

முதலாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் கிறின் பீல்ட் அணியை எதிர்த்து தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் அணி மோதிக் கொண்டது. இதில் தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் அந்தோனியார்புரம் சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து தோட்டவெளி ஜக்கிய அணி மோதிக் கொண்டது.
சென்.அன்ரனிஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அடம்பன் ஜக்கிய அணியை எதிர்த்து சாந்திபுரம் ஸ்ரார் அணி மோதிக் கொண்ட ஆட்டத்தில் சாந்திபுரம் ஸ்ரார் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற முருங்கன் பொதுசன அணிக்கும் அச்சம்குளம் சென்.ஜோசப் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் முருங்கன் பொதுசன அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.