பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2015

வட மாகாண சபையில் நாளை தமிழ் மக்கள் பேரவை தொடர்பான சலசலப்புக்கள் இடம்பெறலாம்?

வட மாகாண சபையின் 42வது அமர்வுகள் நாளை புதன் கிழமை பகல் 9.30 மணிக்கு கைதடியில் அமைந்துள்ள சபை மண்டபத்தில் சபையின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் கூடவுள்ளது.
இந்த அமர்வில் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை சம்பந்தமான சலசலப்புக்கள் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக உறுப்பினர்களினால் முன்வைக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
ஏற்கனவே வட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் காழ்ப்புணர்ச்சி காணப்படும் நிலையில் தற்போது தமிழ் மக்கள் பேரவை சம்பந்தமான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இத்தகைய நிலையில் வட மாகாண சபையில் இது சம்பந்தமான வாதப் பிரதி வாதங்கள் எழக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் உறுப்பினர்கள் மத்தியில் இருந் கருத்துக்கள் எழுந்துள்ளன.