பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2015

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னையில் உள்ள அலுவலங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இம்மாத தொடக்கத்தில் மத்திய வருமான வரித் துறை, மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் கார்த்தி சிதம்பரம் அலுவலத்தில் உள்ள அவரது அறைக்கு சீல் வைத்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் அவரின் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வந்தனர். அவர்கள் பூட்டி சீல் வைத்த அறையை திறந்து கார்த்தியிடம் ஒப்படைத்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சோதனை நடத்தியதில் சில ஆவணங்களை, கார்த்தி அலுவலத்தில் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக வந்தார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உறுதியான தகவல்கள் வெளியாகாததால் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.