பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2015

நிதி அமைச்சு பதவி கபீருக்குவழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள்?


அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீமிற்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதம் அமைச்சரவையில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்களின் போது நிதி அமைச்சு பதவி கபீர் ஹஷீமிற்கு வழங்கப்படவுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது நிதி அமைச்சராக கடமையாற்றிவரும் ரவி கருணாநாயக்கவிற்கு வர்த்தக அமைச்சு பதவியோ அல்லது நீர்பாசன மற்றும் நீர்வழங்கல் அமைச்சு பதவியோ வழங்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.