பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2015

யாழ் – முல்லைத்தீவு பேரூந்தில் பெண்களுக்குதங்களது அந்தரங்கங்களைக் காட்டி வரும் காவாலி ஆண்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பேரூந்துகளில் ஏறும் சில காவாலிகள் பஸ்சினுள் இருக்கும் பெண்களுக்கு தங்களது அந்தரங்கங்களைக்
காட்டிவருவதாக பெண் பயணிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பெண்ணொருவர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
தான் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பேரூந்தில் பிரயாணம் செய்த போது தான் இருந்த இருக்கைக்கு அருகில் நின்று கொண்டு ஒருவன் தனது அந்தரங்கத்தை முழுவதுமாக காற்சட்டைக்கு வெளியே எடுத்துவிட்டு பின்னர் அதனை தனது மேலாடையால் மறைத்தபடி வைத்திருந்து அடிக்கடி தனக்கு காட்டியபடி இருந்ததாகவும் இதனையடுத்து தான் உடனடியாக ஏசத் தொடங்கவே தான் அவ்வாறு செய்யவில்லை என வாதாடி தன்னை கடுமையாக அச்சுறுத்தியத்தியதாகவும் இச் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏனைய பயணிகளும் பஸ் நடத்துனர், சாரதியும் மௌனமாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் குறி்த்த நபரை ஏசத் தொடங்கியவுடன் சிறிது நேரம் தன்னை தரக்குறைவாக ஏசிவி்ட்டு மிருசுவில் பகுதியில் குறித்த நபர் இறங்கிவிட்டதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காவாலிகள் தொடர்பாக பஸ் சாரதி, மற்றும் நடத்துனர், பயணிகள் நடவடிக்கை எடுத்து அவர்களைப் பொலிசில் ஒப்படைக்காவிட்டால் சில வேளைகளில் உங்களது மனைவிகள், சகோதரிகளுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் நடக்கும் என்பது வெளிப்படை உண்மை.