பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சொந்தமாக கடவுச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம் உள்ளதா? அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சொந்தமாக கடவுச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதென அமெரிக்க
நாட்டின் புலனாய்வு துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இன்று தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சொந்தமாக கடவுச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம் இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலம் அகதிகள் போர்வையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குள் தீவிரவாதிகள் நுழைய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் உள்ள Raqqa மற்றும் Deir ez-Zour என்ற இரு முக்கிய நகரங்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 17 மாதங்கள் ஆகிறது.
எனவே, தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்த நகரங்களிலிருந்து கடவுச்சீட்டு அச்சடிக்கப்பட வாய்ப்புள்ளது.
isis_passport_004