பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2015

பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் சுவிஸில் பதுங்கல்? உச்சக்கட்ட பாதுகாப்பில் ஜெனிவா நகரம்


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 4 பேர் சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இந்த ரகசிய தகவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதுடன், 352 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தீவிரமாகியுள்ள நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 4 பேர் சுவிஸின் ஜெனிவா நகரில் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சற்று முன்னர் வெளியாகியுள்ள இந்த ரகசிய தகவலை தொடர்ந்து, ஜெனிவா நகர் முழுவதும் பொலிசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான பொலிசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, ஜெனிவா சாலைகளில் வரும் வாகனங்களை பரிசோதிக்கும் பொலிசார் MP5 ரக துப்பாக்கிகளுடன் காணப்படுவதால், நகர் முழுவதும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.