பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2015

ஐ.நவுக்கு எதிரான மனு நிராகரிப்பு


ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் சுபினரி நண்டி, இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
நாவலாசிரியரும், தேசப்பற்று அமைப்புகளின் பிரதானியுமான குணதாஸ அமரசேகர இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
ஜெனீவா பிரேரணையின் ஊடாக இலங்கையை ஐக்கிய நாடுகள் சபை ஏமாற்றி இருப்பதாகவும், இதனால் ஐக்கிய நாடுகளின் சார்பில் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
எனினும் சுபினரி நண்டி ராஜதந்திர வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்ற நிலையில், அவருக்கு எதிராக வழக்கு தொடரமுடியாது என்று தெரிவித்து, இந்த மனு நிராகரிக்கப்பட்டது.