பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2015

புலனாய்வாளர்கள் வந்தால் தகவல் வழங்க வேண்டாம்! ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

புலனாய்வாளர்கள் எனக் கூறியோ அல்லது இராணுவம் என்று கூறியோ யாரும் காணாமல்போனோரின் வீடுகளுக்கு வந்தால் எந்தவிதமான தகவல்களையும்
வழங்கவேண்டாம்....
என்று ஆணைக்குழுவின் தலைவர் பரணகம காணாமல்போனோரின் உறவுகளிடம் தெரிவித்தார்.சங்கானைப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசாரணையில் சாட்சியம் அளித்த பலர், தமக்குப் புதிய ஆட்சியிலும் புலனாய்வாளர்களின் இடையூறும் அச்சுறுத்தலும் தொடர்ந்து இருப்பதாகச் சுட்டிக் காட்டினர்.
இதற்குப் பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இனிமேல் நாம் புலனாய்வாளர்கள் எனக்கூறியோ அல்லது இராணுவமோ காணாமல்போனோரின் வீடுகளுக்கு வந்தால் எந்தவிதமான தகவல்களும் வழங்கவேண்டாம் . அதையும் மீறித் தகவல் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்த விடயத்துக்காகவோ அவர்கள் வீட்டுக்கு வரும் பட்சத்தில் அவர்களின் இராணுவ அடையாள அட்டையை வேண்டிப் பார்க்கும் உரிமை உங்களுக்கு உண்டு. அதனைப் பார்வையிடத் தந்தால் மட்டும் அதை வேண்டிப் பதிந்து வைத்த பின்னர் உரையாடுங்கள். அந்த விவரம் பயன்மிக்கதாக அமையும்" - என்றார்.